EThanthi - நயன்தாராவின் செல்வாக்கை வெளியிட்ட ஜிகியூ பத்திரிகை !

Flash News

நயன்தாராவின் செல்வாக்கை வெளியிட்ட ஜிகியூ பத்திரிகை !

இந்தியாவின் செல்வாக் குள்ளவர்கள் உள்ள பட்டியலில் 50 பேர் பட்டியலை ஜிகியூ என்ற 
இதழ் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது,

அந்த வகையில் 2018-ம் ஆண்டின் செல்வாக்குள்ள இளம் இந்தியர்கள் 50 பேர் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது. 

இதில் 35 வயது தென்னிந்திய நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவும் இடம் பெற்றுள்ளார்.

சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் ஈட்டிய 100 இந்தியர்கள் பட்டியலி லும் அவர் இருந்தார். 

நயன்தாரா சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த அனைத்து படங்களும் வசூல் பார்த்தன. தென்னிந்திய திரையுலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறார்.

எந்தவொரு தென்னிந்திய நடிகையும் இதுவரை வாங்காத சம்பளம் 6 கோடிக்கு மேல் வேண்டு கின்றார்.

ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா படங்களை டைரக்டு செய்துள்ள டைரக்டரான ரஞ்சித்து க்கும் . 
தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பார்வதி க்கும் 50 பேர் பட்டியலில் இடம் கிடைத்து உள்ளது. 

இவர் பாலியல் தொல்லைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். 

மற்றும் நடிகைக ளான டாப்சி, அலியாபட், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோரும் இந்த பட்டிய லில் உள்ளனர்.
நயன்தாராவின் செல்வாக்கை வெளியிட்ட ஜிகியூ பத்திரிகை ! நயன்தாராவின் செல்வாக்கை வெளியிட்ட ஜிகியூ பத்திரிகை ! Reviewed by EThanthi.in on December 11, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close