அண்ணன் தம்பி பஞ்சாயத்து; வைரமுத்து சொன்ன பாட்டு வரிகள் !
இளையராஜா வுக்கும் கங்கை அமரனு க்கும் நடந்த ஒரு சின்னதான விஷயம்,
அந்த விஷய த்தைத் தீர்த்து வைத்த பாடல் வரிகள் என்று கவிஞர் வைரமுத்து சுவாரஸ்ய மாகச் சொன்னார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படிக்காதவன். சிவாஜி கணேசன், அம்பிகா, நாகேஷ், ஜனகராஜ்
முதலானோர் நடித்த இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கி யிருந்தார்.
மிகப்பெரிய வெற்றி யடைந்த இந்தப் படத்தில், எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படத்துக்கு இசை இளையராஜா.
படத்தின் ஹிட்டான பாடல்களில் ஒன்று... ‘ஒரு கூட்டுக் கிளியாக ஒரு தோப்புக் குயிலாகப் பாடு... பண் பாடு.. என்ற பாடல்.
மலேசியா வாசுதேவன் மிகச் சிறப்பாக, சிவாஜிக்கு குரல் தந்து பாடியிருப்பார்.
இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இந்தப் பாடலின் நினைவாக இன்னொரு தகவலைச் சொன்னார் வைரமுத்து.
‘பிரசாத்தில் ரிக்கார்டிங். ஒரு கூட்டுக் குயிலாக... பாடல் பிரமாதமாக வரும் என்று தெரிந்து விட்டது.
மலேசியா வாசுதேவன் பாடி க்கொண்டி ருக்கிறார். அப்போது அங்கே கங்கை அமரன் வந்தார்.
கங்கை அமரன் அவருடைய அண்ணன் இளையராஜா விடம் ஏதோ கோரிக்கை வைத்திருப்பார் போல. என்னவோ கேட்டிருப்பார் போல.
விறு விறுவென வந்த கங்கை அமரன், பாடல் எழுதிய பேப்பரை எடுத்துப் பார்த்தார்.
பாடல் வரிகளை யெல்லாம் படித்தார். சட்டென்று அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு, ‘இந்த ரெண்டு வரியைப் படிங்க’ என்று பேப்பரைக் கொடுத்தார்.
இளையராஜா வும் வாங்கிப் பார்த்தார். அந்த வரிகள்...’என்னென்ன தேவைகள்... அண்ணனைக் கேளுங்கள்’ என்று நான் எழுதியிருந்த வரிகள்.
இப்படிக் கங்கை அமரன் காட்டிய செயலால், இன்னும் கோபமானார் இளையராஜா.
அடுத்த நிமிடமே கங்கை அமரனிடம், ‘இந்தா பிடி. முதல்ல இந்த ரெண்டு வரியை நீ படி’ என்று அந்தப் பாடலில் இருந்து இரண்டு வரிகளைக் காட்டினார்.
இளையராஜா கங்கை அமரனிடம் சுட்டிக் காட்டிப் படிக்கச் சொன்ன வரிகள் என்ன தெரியுமா?
‘நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா? வியர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா?’ என்கிற வரிகள்.
ஒரு வழியாக, இந்தப் பாட்டின் மூலமே அண்ணன், தம்பி பஞ்சாயத்து நடந்து முடிந்தது என்று வைரமுத்து குறிப்பிட் டுள்ளார்.



No comments