எகிப்தில் ஆபாச உடையணிந்து வந்த நடிகைக்கு 5 வருட சிறை?
பொதுவாக சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் நடிகைகள் மிக கவர்ச்சி யாக தான் உடை அணிந்து வருவார்கள்.
அது எல்லா நாட்டிலும் இருக்கும் ஒரு நடைமுறை.
அதிலும் சில நடிகைகள் அணிந்து வரும் உடைகள் மிக மோசமாக பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கும்.
அதற்காக சிலர் விமசனங்கள் கூட செய்வார்கள்.
ஆனால் எகிப்தில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு தொடை தெரியும் படி
மெல்லிய உடை அணிந்து வந்த நடிகை ரானியா யூசுப்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் எகிப்து நாட்டு நடிகை. 44 வயதான ரானியா, ‘கெய்ரோ சினிமா விருது விழா’விற்கு
வரும் போது அணிந்து வந்த உடை ஆபாசமாக உள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது.
அவர் மீது வழக்கு பதிவு செய்து வரும் ஜனவரி 12ம் தேதி விசாரணை நடைபெற வுள்ளது.
குற்றம் நிரூபிக்கப் பட்டால் இந்த நடிகைக்கு 5 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.




No comments