EThanthi - 4 ஆண்டுக்கு பிறகு கணவருடன் நடித்த ஜெனிலியா !

Flash News

4 ஆண்டுக்கு பிறகு கணவருடன் நடித்த ஜெனிலியா !

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மானவர் நடிகை ஜெனிலியா. 
இதை யடுத்து இவர் தமிழில் ‘சச்சின், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘வேலாயுதம்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

குறுகிய காலத்தில் ஒரு சில படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜெனிலியா.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை 2012 -ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத் துக்குப் பின் நடிப்பதை விட்டு விட்டார். ஜெனிலியா வுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

திருமணத் திற்குப் பின் நடிப்பதை நிறுத்தி யிருந்தார் ஜெனிலியா.

சுமார் 6 வருடங்கள் கழித்து அவர் தயாரிக்க அவரது கணவர் ரித்தேஷ் கதா நாயகனாக நடித்துள்ள ‘மௌலி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி யுள்ளார். 
இந்த ஆறு வருடங்களில் ஒரு ஹிந்தி, ஒரு மராத்தி படத்தில் சில வினாடிகள் மட்டுமே

இடம் பெறும் சிறப்புத் தோற்றத்தில் வந்தார். இப்போது ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

ஜெனிலியா மீண்டும் நடிக்க வந்தது பற்றி கணவர் ரித்தேஷ் கூறுகையில்,
“படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்று வைக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே,

அதில் ஜெனிலியா மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்,” என்றார்.

கணவருடன் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் தோன்றுகிறார் ஜெனிலியா.
4 ஆண்டுக்கு பிறகு கணவருடன் நடித்த ஜெனிலியா ! 4 ஆண்டுக்கு பிறகு கணவருடன் நடித்த ஜெனிலியா ! Reviewed by EThanthi.in on December 10, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close