பல தவறு செய்து விட்டேன் - சன்னி லியோன் உருக்கம் !
தன் வாழ்வில் பல தவறுகள் செய்துள்ள தாக நடிகை சன்னி லியோன் தெரிவித் துள்ளார்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
அவரின் வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெப்சீரீஸாக எடுக்கப் பட்டுள்ளது.
10 எபிசோடுகள் கொண்ட அந்த சீரீஸில் நடித்தது குறித்து பேட்டி அளித்துள்ளார் சன்னி லியோன்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்ப தாவது,
பெற்றோர் கஷ்டம்
என் அம்மா 2008ம் ஆண்டு இறந்தார். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அப்பா கடந்த 2010ம் ஆண்டு உயிர் இழந்தார்.
வெப் சீரீஸில் என் பெற்றோராக நடித்தவர்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்று எனக்கு தெரியும்.
இருப்பினும் அவர்கள் இறந்து போவது போன்ற காட்சியை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அம்மா அப்பா
சவப்பெட்டி யில் ரீல் அம்மா, ரீல் அப்பா புற்று நோயால் அவதிப்படுவது போன்று நடித்ததையே பார்க்க முடிய வில்லை.
இந்த காட்சி எல்லாம் வரும் என்று எனக்கு தெரியும். ஆனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்று நினைத்தேன்,
முடிய வில்லை. என்னை நல்லவள் போன்று காட்ட இந்த சீரீஸை எடுக்க வில்லை. உண்மையை உலகிற்கு சொல்லி யுள்ளோம்.
தொழில் அதிபர் நடிகை
பணத்தின் மதிப்பை என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர்.
அதனால் நான் முதலில் தொழில் அதிபர் அதன் பிறகே நடிகை. தற்போது மூன்று குழந்தை களுக்கு நான் தாய்.
அதனால் பணம் நிச்சயம் எனக்கு பிடித்த ஒன்று. நான் என் வாழ்வில் பல தவறுகளை செய்துள்ளேன். அது தற்போது தான் புரிகிறது.
வாழ்க்கை முடிவு
என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகள் எனக்கு தெரியும். ஆனால் நான் எடுத்த முடிவுகள்
என் குடும்பம் மற்றும் எனக்கு நெருக்க மானவர்களை எப்படி பாதித்தது என்பது தெரிய வில்லை.
அது தற்போது புரியும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நம்ம பிலிம்ஸை சேர்ந்த ஷரீன் மற்றும் என் கணவர் டேனியல் வெபர் தான் என்னை பற்றிய
வெப் சீரீஸ் எடுக்கும் ஐடியாவை கொடுத்தனர் என்கிறார் சன்னி லியோன்.
திசா பதானி கவர்ச்சி காட்சி - இதுவரை இல்லாத கவர்ச்சி !













No comments