EThanthi - அமீர்கான் படம் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதால் மன்னிப்பு !

Flash News

அமீர்கான் படம் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதால் மன்னிப்பு !

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ள 
நடிகர் அமீர் கான், ரசிகர்களை மகிழ்விக்க தவறியதற்கு மன்னிப்பு கேட்டார்.

அமீர் கான், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான், மிகப் பெரிய அளவில் தோல்வி யடைந்தது. 

இந்நிலையில், இந்த படத்தின் தோல்விக்கான முழுப்பொறு ப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாக அமீர் கான் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அமீர் கான்,

"நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று நினைக்கிறேன். அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். 

ஒரு நல்ல திரைப் படத்தை கொடுப்பதற்கு நாங்கள் கடுமையாக உழைத்தோம்.

இந்த படத்தை பிடித்தவர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களது நன்றி. 

ஆனால், அவர்கள் சிறிய அளவிலேயே இருக்கிறார்கள். பெரும் பாலானவர்க ளுக்கு இந்த படம் பிடிக்க வில்லை. அதையும் நாங்கள் அறிந்திருக் கிறோம்.

இந்த முறை ரசிகர்களை மகிழ்விக்க முடியாததால் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். 

திரையரங் குக்கு நிறைய மக்கள் மிகப் பெரிய எதிர் பார்ப்புடன் வந்து, படத்தை கொண்டாட முடியாமல் திரும்பச் சென்றார்கள் என்பது எனக்கு தெரியும்.
ஒரு படத்தை குறித்து தங்களுக்கு தோன்றுவதை கூற ரசிகர்களுக்கு உரிமை உள்ளது. 

நாங்கள் எங்களால் முடிந்த உழைப்பைக் கொண்டு முயற்சி செய்தோம். என்னால் அது மட்டும் தான் சொல்ல முடியும்.

ரசிகர்களை மகிழ்விப்பதில் நாங்கள் தோல்வி யுற்றிருக் கிறோம் என்பதை எண்ணி எனக்கு வருத்தமாக உள்ளது. 

அடுத்த முறை சற்று கடுமையாக உழைப்போம்.

ஒரு படம் வெற்றி பெறுமா தோல்வி அடையுமா என்பதை படம் வெளி வருவதற்கு 

முன் எனக்கு தோன்றுவதை பொது இடத்தில் வெளிப் படையாக பேசுவது எனக்கு உகந்தது அல்ல.

காரணம், நான் ஒரு திரைப்படத்தை உருவாக்கு கிறேன் என்றால், அதை மிகவும் நெருக்கமான தாக உணருவேன்.

அது எனது சொந்த குழந்தை மாதிரி. அதனால், அந்த படம் எதிர் பார்க்கப்பட்ட அளவுக்கு வெற்றி பெறா விட்டாலும், 
அது என்னுடைய குழந்தை யாகவே இருக்கும்" என்றார்.

பாலிவுட்டில் இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் எதிர் பார்க்கப்பட்ட திரைப்படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
அமீர்கான் படம் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதால் மன்னிப்பு ! அமீர்கான் படம் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதால் மன்னிப்பு ! Reviewed by EThanthi.in on November 27, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close