உங்களுக்கு ரசிகர்கள் இருக்காங்களா? - கேள்வி எழுப்பியவருக்கு உதயநிதி பதில் !
உங்களுக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கா? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பிய வருக்கு உதயநிதி யின் பதிலளித் துள்ளார்
தமிழகத்தில் கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
பல்வேறு மாவட்டங்களில் இன்னும் முழுமையாக மின்சாரம் சரி செய்யப் படாமல் இருப்பதால், மக்கள் கடும் அவதிக் குள்ளாகி யுள்ளனர்.
மேலும், பல்வேறு திரையுலகினர், தன்னார் வலர்கள் என நிவாரணப் பொருட்க ளுடன் சென்று மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
இது தொடர்பான புகைப் படங்கள் ட்விட்டரில் தொடர்ச்சியாக வந்து கொண்டி ருக்கிறது.
தனது நற்பணி மன்றத்தில் உள்ளவர்கள் செய்யும் நிவாரண உதவிகளின் புகைப் படங்கள் வரும் போது, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
தொடர்ச்சியாக இதைச் செய்து வருவதால், “உனக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கா?” என்று உதயநிதி யிடம் ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு “ரசிகர்கள் எல்லாம் இல்ல நண்பா. நற்பணி செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும் நண்பர்கள்!” என்று பதிலளித் துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இவரது பதிலுக்கு பலரும் வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள்.
Fans laam illa nanba.. நற்பணி செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும் நண்பர்கள் ! 😁 https://t.co/5CupHekFiu
— Udhay (@Udhaystalin) November 23, 2018
சமீபத்தில் பேனர்கள் வைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, உதயநிதி அளித்த பதிலும் பலரால் பாராட்டப் பட்டது குறிப்பிடத் தக்கது.
டெல்டா மக்களை 'கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தி லிருந்து மீண்டு வர தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர்.
சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி யுள்ளனர்.
மேலும், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், சிவ கார்த்திகேயன் 20 லட்ச ரூபாயும், இயக்குநர் ஷங்கர் 10 லட்ச ரூபாயும் அளித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.



No comments