EThanthi - விஷால் மணக்கப்போகும் மணப்பெண் யார்? தெரியுமா?

Flash News

விஷால் மணக்கப்போகும் மணப்பெண் யார்? தெரியுமா?

அண்மையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த 'சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 
அவ்விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். விஷால் நிகழ்ச்சியில் பேசுகையில், 'இரும்புத்திரை படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்தப்படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டது. எனக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. 

வாக்குச்சீட்டு முறையைத் தான் நான் அதிகம் நம்புகிறேன். நடிகர் சங்கம் கட்டடம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டு விடும். 

அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் என் திருமணம் நடக்கும். மணப்பெண் யார் என்று வியக்கிறீர்களா. 

அவரைத் தான் நான் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக் கிறேனே’ என்று பொடி வைத்துப் பேசி முடித்தார் விஷால். 
விஷால் நடிகை வரலட்சுமியை நீண்ட காலமாக காதலித்து வருவதாக கோலிவுட்டில் பேச்சு இருந்தாலும் 

இது குறித்து இருவரும் அதிகார பூர்வமாக தெரிவித்திருக்க வில்லை. 

2019-ம் ஆண்டு விஷால் டும் டும் கொட்டும் வரை அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
விஷால் மணக்கப்போகும் மணப்பெண் யார்? தெரியுமா? விஷால் மணக்கப்போகும் மணப்பெண் யார்? தெரியுமா? Reviewed by EThanthi.in on November 27, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close