அதை செய்து கொண்டே குழந்தைக்கு பால் கொடுத்திருக்கேன் - கஸ்தூரி !
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை கஸ்தூரி .
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பல விசயங் களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக கருத்துக் களையும் பதிவிட்டு வருகிறார்.
மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று அதிரடி கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதன் காரணமாக அவரின் பெயர் அடிக்கடி பேசப்படும் ஒன்றா கிவிட்டது.
இந்நிலையில் ராம்ப்வாக் செய்து கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த
மாடலை புகழ்ந்த கஸ்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட் டுள்ளனர்.
அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த ஃபேஷன் ஷோவில் மாடல் மாரா மார்ட்டின்
தனது 5 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த படியே ராம்ப்வாக் செய்தார்.
அதை பலரும் பாராட்டி யுள்ளனர்.நடிகை கஸ்தூரியும் மாராவின் செயலை பாராட்டி ட்வீட்டினார்.
கஸ்தூரியின் இந்த பாராட்டை பார்த்தரசிகர் ஒருவர் “நடந்துக்கிட்டே பால் கொடுக்குறது
என்ன மாதிரியான புத்திசாலித் தனம் மேடம்? உங்கள மாதிரி 4 பேரு பேசணும்னு சொல்லி விளம்பரத்துக் காக பண்ற கேவலமான யுக்தி அது..
தாய்மைக் குன்னு ஒரு மரியாதை இருக்கு..அத கெடுக்க வேண்டாம்” என கூறி யிருந்தார்.
இதற்கு கஸ்தூரி, “நான் கார் ஓட்டிகிட்டே , சமைச்சுக் கிட்டே, பஸ்ஸுல, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே எல்லா சந்தர்ப்பத் துலயும் பால் குடுத்துருக்கேன்.
மேடையில ஒரு வினாடிவினா போட்டியில பங்கெடுத்து கிட்டே பால் கொடுத்தி ருக்கேன்.
கனடாவுல ஒரு MP பால் கொடுத்துக் கிட்டே நாடாளுமன்ற வோட்டெடுப்புல கலந்துக் கிட்டாங்க.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.




No comments