ரஜினி அனுப்பிய பொருட்களை நிர்வகிக்கித்தது யார்? கஸ்தூரி !
கஜா’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங் களுக்கு திரை யுலகப் பிரபலங்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
இது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய கஸ்தூரி, “சொல்ல முடியாத துயரில் உள்ள
டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக் கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன்.
என்னால் முடிந்த அளவில், 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட் களைப் பாதிக்கப்பட்டப்
பகுதிகளு க்கு அனுப்பி, நானும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களு க்குச் செல்ல உள்ளேன்.
1000 குடும்பத்தி ற்குத் தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர் மற்றும் போர்வைகள்,
கொசு மருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள், சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்பு கிறோம்.
உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பல தரப்புகளில் இருந்து வந்து கொண்டிரு க்கும்
வேளையில், குடிநீர்ப் பற்றாக்குறை பூதாகர மாகத் தலை யெடுத்துள்ளது.
இன்னும் நாட்கள் செல்லச் செல்ல சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் மிகப்பெரிய தேவையாக இருக்கப் போகிறது.
இதற்கு அத்தியாவசி யமான 1000 நீர் சுத்திகரிப்புக் கருவிகளை அனுப்புகிறோம்.
இந்த சுத்திகரிப்புக் கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை.
எங்கும் எடுத்துச் செல்லலாம், சுலபமாகப் பயன்படுத்தலாம்.
தண்ணீர் எவ்வளவு மாசு பட்டிருந்தாலும், தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றி விடும். கொதிக்க வைக்க வேண்டிய அவசிய மில்லை.
பிளாஸ்டிக் பாட்டில் களையும் கேன்களையும் நாட வேண்டிய தில்லை. இரண்டு வருடங்களு க்குக் குறையாமல், செலவில்லாமல் குடிநீரை சுத்தப் படுத்திக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்குக் கிடைக்கிறது. இங்கு நம் பயன் பாட்டிற்காக
ஆயிரம் ஃபில்டர்களை உடனடியாகத் தயாரித்து அனுப்பி யிருக்கும் சென்னை ராமா வாட்டர் ஃபில்டர் நிறுவனத்திற்கு நன்றி.
மேலும், ரஜினி அனுப்பிய பொருட்களைக் கூட நமது தம்பிகள் தான் நிர்வகிக் கின்றனர்.
உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால், முன்னாடி இருந்த பேரிடர்களை விட, இந்த முறை தமிழக அரசின் அணுகுமுறை நன்றாக இருக்கிறது.
முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று பார்த்தார் என்றால், அவர் ஒரே நேரத்தில் எல்லாரையும் பார்க்கணும்னு நினைச்சு இருக்கலாம்.
இருந்தாலும், அவர் தரை மார்க்கமாக வந்து பார்த்தா நல்லாத் தான் இருக்கும்.
அங்கு ராணுவ உதவி அவசியத் தேவை. மத்திய அரசு இன்னும் வேகமாகச் செயல்படணும்.
நமக்குத் தெரியாத ஆட்கள் மூலமாக உதவிகள் போய்ச் சேர்வதை விட, தெரிந்தவர்கள் மூலமாக போய்ச் சேர்வது நல்லது” என்றார்.




No comments