இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார் !
மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் (82) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் காலமானார்.
அவரது மறைவால் வாடிய அவரது மனைவி ராஜம், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளார்.
இந்நிலை யில், சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 3 மணிக்கு மேல் நடைபெறும் அவரது குடும்பத்தினர் தெரிவித் துள்ளனர்.
இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர்



No comments