EThanthi - இரு காதல் ஒரு கதை திரை விமர்சனம் !

Flash News

இரு காதல் ஒரு கதை திரை விமர்சனம் !

நாயகன் ஜோதியும் நாயகி தேன்மொழியும் ஒரே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். ஜோதி தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். 
தேன்மொழி தன்னுடைய அக்கா - மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இவர்களுடைய வகுப்பில் படிக்கும் சக்தி, பார்க்கும் பெண்களை எல்லாம் அடைய நினைப்பவர். அது போல் தேன்மொழியை அடைய நினைக்கிறான். 

ஆனால் ஜோதியும், தேன்மொழியும் காதலிப்பதால் இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறான்.

அதன்படி ஜோதியை தவறாக சித்தரித்து தேன்மொழி-ஜோதி காதலை பிரித்து விடுகிறார். 

இவர்களின் இந்த பிரிவை சக்தி சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தேன்மொழியுடன் ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார்.

எப்படியாவது தேன்மொழியை அடைந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான். இறுதியில் சக்தியின் திட்டம் நிறைவேறியதா? 

ஜோதி- தேன்மொழி காதலில் இணைந்தார்களா? சக்தியின் சுயரூபம் அனைவருக்கும் தெரிந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜோதி கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜனா, காதல் காட்சிகள் மற்றும் அம்மாவுட னான சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

பாடல் காட்சிகளில் முகபாவனைகள் நடன அசைவுகள் ஆகியவற்றில் கைதேர்ந்தவர் போல் நடித்திருக்கிறார்.

நாயகியாக தேன்மொழி கதா பாத்திரத்தில் நடித்திருக்கும் அனு கிருஷ்ணா, நாயகனுட னான காதல் காட்சிகளிலும்

நாயகனை வெறுக்கும் காட்சிகளிலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி யிருக்கிறார்.

சக்தி வில்லத் தனமான நடிப்பில் பாராட்டு பெறுகிறார். நாயகன் அம்மா மீரா கிருஷ்ணன், நாயகி அண்ணி தேவதர்ஷினி, 

மற்றும் உமா பத்பநாபன் உள்ளிட்ட பலர் அவர்களுக் குண்டான கதா பாத்திரத்தை செவ்வனே செய்திருக் கிறார்கள்.
பள்ளி மாணவர்களின் கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் பன்னீர் செல்வம், 

அதில் அம்மா சென்டிமென்ட், காதல் என திரைக்கதையை போரடிக்காமல் அமைத்திருக்கிறார். 

பள்ளிப் பருவ மாணவர்களில் கெட்ட மாணவர்கள், நல்ல மாணவர் களையும் கெடுத்து விடுகிறார்கள்.

எனவே, மாணவர்கள் பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்துள்ள இயக்குனரை பாராட்டலாம். 

கணவனை இழந்த பெண்களுக்கு சமூகத்தில் நல்ல மரியாதை இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருக் கிறார்.

குஹா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி யிருக்கலாம். 

விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு தூணாக அமைந்திருக் கிறது.

This is not a Story, Signification
இரு காதல் ஒரு கதை திரை விமர்சனம் ! இரு காதல் ஒரு கதை திரை விமர்சனம் ! Reviewed by EThanthi.in on July 16, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close