EThanthi - ரூ 5000 பில்லுக்கு ரூ1.5 லட்சம் டிப்ஸ் - இன்ப அதிர்ச்சி சம்பவம் !

Flash News

ரூ 5000 பில்லுக்கு ரூ1.5 லட்சம் டிப்ஸ் - இன்ப அதிர்ச்சி சம்பவம் !

புத்தாண்டு என்பது மகிழ்ச்சி யானது. ஒவ்வொருவரும் தன் உள்ளம் மகிழ பல்வேறு மாற்றங்கள் நிகழ வேண்டும் என நினைக்கும் நாள் இது. 
ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விப்பது தான். ஒருவர் வாழ்வில் மாற்றத்தை நாம் தான் நிகழ்த்த வேண்டும்.

இப்படியாக ஒரு ஹாலிவுட் நடிகர் புத்தாண்டிற்குச் செய்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஹாலிவுட் பிரபல நடிகரும் பாடகருமான டோனி வால்பெர்க் தனது மனைவியும் நடிகையு மான

ஜென்னி மெக்கார்த்தி யுடன் ஒரு அமெரிக்கா வின் வடக்கு மெக்சிகன் பகுதியில் உள்ள தண்டர் பே ரிவர் என்ற உணவகத்திற்கு உணவருந்தச் சென்றுள்ளனர்.

அங்கு டேனியல் ஃபிரான்சோனி என்பவர் அவர்களுக்கு வெயிட்டராக பணியாற்றி யுள்ளார்.

இருவரும் உணவருந்தி பின்பு டேனியல் ஃபிரான்சோனி அவர்களிடம் பில் வழங்கி யுள்ளார். அவர்களின் பில் தொகை 78.75 டாலர் வந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ5,600 ஆகும்.

ஆனால் டோனி வால்பெர்க்கோ தனது வாலெட்டி லிருந்து கார்டை எடுத்து. பில்லில் மொத்தம் 2098.75 டாலரை எடுத்துக் கொள்ளும் படியும். 
அதில் உணவுக்கான பில் 78.75 டாலரைக் கழித்துக் கொண்டு 2020 டாலரை வெயிட்டருக்கு டிப்ஸாக எடுத்துக் கொள்ளும் படியும்

குறிப்பிட்டு அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் களை யும் பில்லில் எழுதியிருந்தார்.

2020 அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு சுமார் ரூ1.4 லட்சமாகும். ரூ5 ஆயிரத்திற்குச் சாப்பிட்டு விட்டு ரூ1.4லட்சம் டிப்ஸாக வழங்கியது குறித்து செய்தி சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து டேனியல் ஃபிரான்சோனி கூறும்போது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தங்குவதற்கு வீடே இல்லாத சூழ்நிலையில் இருந்ததாகவும்,

தன் குடும்பத்துடன் மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வந்ததாகவும், இந்த பணம் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
ரூ 5000 பில்லுக்கு ரூ1.5 லட்சம் டிப்ஸ் - இன்ப அதிர்ச்சி சம்பவம் ! ரூ 5000 பில்லுக்கு ரூ1.5 லட்சம் டிப்ஸ் - இன்ப அதிர்ச்சி சம்பவம் ! Reviewed by EThanthi.in on January 06, 2020 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close