EThanthi - ஓ மை காட் விஜய்க்கு ரூ.100 கோடியா?

Flash News

ஓ மை காட் விஜய்க்கு ரூ.100 கோடியா?

விஜய் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவரை யார் இயக்கப் போகிறார் என்று பேச்சு கிளம்பி யுள்ளது. 
ஓ மை காட் விஜய்க்கு ரூ.100 கோடியா?

இந்நிலையில் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும், ஷங்கர் இயக்குகிறார் என்றும்,

அனிருத் இசையமைக் கிறார் என்று கூறப்படுகிறது. 

விஜய் ரசிகர்களும் அந்த தகவலை சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கி றார்கள்.

ரூ. 100 கோடி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. அதில் ரூ. 50 கோடி முன்பணமாக அளிக்கப் பட்டுள்ளதாம். 

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாக வில்லை. 

ரூ. 100 கோடி சம்பளம் பெறுவதன் மூலம் விஜய் ரஜினிகாந்தை முந்தி விட்டார் என்கிறார்கள் ரசிகர்கள். தர்பார் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ. 90 கோடி சம்பளம் என்பது குறிப்பிடத் தக்கது.

வதந்தியே

விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு ரூ. 50 கோடி முன்பணம் கொடுக்கப் பட்டுள்ளது என்று கூறுவது எல்லாம் வெறும் வதந்தி தான். 

யாரும் சம்பள விஷயத்தில் ரஜினியை முந்த வில்லை என்று கோலிவுட்டில் விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 
விஜய் அவர் பாட்டுக்கு மாஸ்டர் படத்தில் நடிக்கிறார்.

அவரை பற்றி யாரோ வேண்டும் என்றே இப்படி கிளப்பி விடுகிறார்கள் என்கிறார்கள் கோலிவுட் காரர்கள்.

மாஸ்டர்

மாஸ்டர் பட வேலையை முடித்த பிறகே அடுத்த படம் குறித்து முடிவு செய்வாராம் விஜய்.

அதற்குள் விஜய்யை ஷங்கர் இயக்குகிறார், பொன்ராம் இயக்குகிறார், லோகேஷே மீண்டும் இயக்குகிறார்,

அட்லி இயக்குகிறார், முருகதாஸ் இயக்குகிறார் என்று ஆளாளுக்கு பேசுகிறார்கள். சம்பந்தப்பட்ட யாரும் இந்த தகவலை உறுதி செய்ய வில்லை.
ஓ மை காட் விஜய்க்கு ரூ.100 கோடியா? ஓ மை காட் விஜய்க்கு ரூ.100 கோடியா? Reviewed by EThanthi.in on January 06, 2020 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close