பிரதமர் வீட்டில் எஸ்.பி.பிக்கு நடந்தது என்ன?
பிரபல பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம், தமக்கு பிரதமர் மோடி வீட்டில் செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித் துள்ளார்.
சென்ற அக்டோபர் 29ம் தேதி பிரதமர் மோடியின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும்
முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பிரதமருடன் 'செல்பி' புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது நினை விருக்கலாம்.
முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பிரதமருடன் 'செல்பி' புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது நினை விருக்கலாம்.
இந்நிலையில், அந்த விழாவில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி பால சுப்பிரமணியம், அங்கு தான் நடத்தப்பட்ட விதம் குறித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணிய த்தை பிரதமர் வீட்டின் பாதுகாப்பு வீரர்கள் தடுத்து, எஸ்பி பால சுப்பிரமணியத் திடம் இருந்த செல்போனை வாங்கி உள்ளனர்.
ஆனால், பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான் மற்றும் சில நடிகைகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, அவர்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்து சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாடகர் எஸ்.பி. பால சுப்பிரமணியம் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், பிரதமர் மோடியின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போது
தம்மிடம் இருந்த செல்போனை வாங்கிய பாதுகாப்பு வீரர்கள், பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான் மற்றும்
சில நடிகைகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இது திகைப்பை ஏற்படுத்தி யிருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.



No comments