EThanthi - ரம்யா கிருஷ்ணனின் குயின் டிரைலர் !

Flash News

ரம்யா கிருஷ்ணனின் குயின் டிரைலர் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்பட மாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். 
குயின் டிரைலர்
ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாறு பிரியதர்ஷினி இயக்கத்தில் தி அயர்ன் லேடி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் உருவாகிறது. 

இதில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார்.

மதராச பட்டிணம், தெய்வத் திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக்கி வருகிறார். 

இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரனாவத் தோன்றும் காட்சிகள் வெளியாகின. 

ஜெயலலிதா வாக நடிக்க கங்கனா பொருத்த மற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. அவரை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதா வின் வாழ்க்கையை குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கி யுள்ளார். 
இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

26 நொடிகள் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதா வின் பள்ளி பருவம், திரை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் இடம் பெற்றது.

தற்போது இதன் டிரைலரை கவுதம் மேனன் வெளி யிட்டுள்ளார். 

இந்த ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் 14ம் தேதி குயின் வெப் சீரிஸ் வெளியாக இருப்பதாக அறிவித்திருக் கிறார்கள்.
ரம்யா கிருஷ்ணனின் குயின் டிரைலர் ! ரம்யா கிருஷ்ணனின் குயின் டிரைலர் ! Reviewed by EThanthi.in on December 09, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close