சிறு வயதில் நான் செய்தததை பெரிது படுத்தாதீர்கள் - லாரன்ஸ் !
சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடிகர் ரஜினியின் 'தர்பார்' பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தீவீர ரஜினி ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்,
தனது பேச்சின் இடையில், தான் சிறுவயதில் நடிகர் கமலின் போஸ்டரில் சாணி அடித்ததாகக் குறிப்பிட்டார்.
தனது பேச்சின் இடையில், தான் சிறுவயதில் நடிகர் கமலின் போஸ்டரில் சாணி அடித்ததாகக் குறிப்பிட்டார்.
இதற்கு சமூக வலை தளங்களில் பரவலான விமர்சனங் களும் கண்டனங்களும் எழுந்தன.
அதை யடுத்து, அதற்கு பதிலளிக்கும் வகையில், ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்க மளித்துளார்.
அதை யடுத்து, அதற்கு பதிலளிக்கும் வகையில், ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்க மளித்துளார்.
அவரது பதிவில்,
"கமல் பட போஸ்டரின் மீது சாணி அடித்தது பற்றி நான் பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருகின்றனர்.
சிறுவயதில் அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது என்னை அறியாமல் கமலுக்கு எதிராக அந்த காரியத்தை செய்தேன்.
எனக்கு கமல் மீது அதிக மரியாதை உள்ளது.
எனக்கு கமல் மீது அதிக மரியாதை உள்ளது.
நான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டு மானாலும் மன்னிப்பு கேட்பேன், ஆனால் நான் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தர்பார் இசை வெளியீட்டு விழாவில், நான் பேசியதை முழுமையாக கேட்டால் உண்மை புரியும். அதில் கமலை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது".
என தெரிவிக்கப் பட்டுள்ளது.



No comments