EThanthi - டிசம்பர் 12-ல் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - அரசியலா பின்னணியா?

Flash News

டிசம்பர் 12-ல் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - அரசியலா பின்னணியா?

நடிகர் கமல் ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசனு க்கு,17வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, 
சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
அவரது கலையுலகப் பங்களிப்பை பாராட்டி, கௌரவிக்கும் விதமாக அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட உள்ளது. 

தொழில் ரீதியாக வக்கீலாக இருந்தாலும், நடிப்பதையும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார் சாருகுஹாசன். 

சமீபத்தில் கூட, இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்தார் சாருஹாசன், 

தனது 90-வது வயதிலும், தொடர்ந்து நடித்து வரும் சாருஹாசன், உலகிலேயே இன்றும் நடித்து வரும் அதிக வயதுடைய கலைஞர்களில் முக்கியமான வராக கருதப்படுகிறார். 
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியே தொடரலாம்
பல்வேறு பிராந்திய மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்திருக்கும் சாருஹாசன்,

1986ல் வெளியான ‘தபாரனா கதே’ திரைப் படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

தமிழில் , மீண்டும் ஒரு காதல் கதை, வேதம் புதிது, தளபதி, போன்றவை இவர் நடிப்பில் முத்திரை பதித்த படங்களாகும். 

இவரின் தம்பியான கமல்ஹாசன் அரசியலில் இறங்குவதை விமர்சித்த சாருஹாசன், 'கமல், ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பதை விட தற்போது நடக்கும் எடப்பாடி பழனிச்சாமி யின் ஆட்சியே தொடரலாம்..!', 

என்கிற வகையில் சில மாதங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
டிசம்பர் 12-ல் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - அரசியலா பின்னணியா? டிசம்பர் 12-ல் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது -  அரசியலா பின்னணியா? Reviewed by EThanthi.in on December 09, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close