முதன் முதலாக கார்ப்பரேட் நிறுவன விளம்பரத்திற்கு இசை அமைத்த இளையராஜா !
இசையமைப்பாளர் இளையராஜா, முதன் முதலாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு இசை அமைத்துள்ளார்.
பிரபல கோகோ கோலா குளிர் பானங்களை தயாரித்து வரும் இந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் (எச்.சி.சி.பி) நிறுவனத்திற் கான கார்ப்பரேட் இசையை உருவாக்கி தந்துள்ளார்.
இதுவரை 1,000 படங்களில் 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கிய இளையராஜா எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற் காக இசை அமைத்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எச்.சி.சி.பிக்கு மேஸ்ட்ரோ இசையமைத்த இசையானது அவரது பிரத்யேக பாணியில் அமைந்துள்ளது. இது அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.
இந்த இசை கேட்பவருக்கு எளிய வகையில் உடனடியாக, மனதில் பதிகிறது. என எச்.சி.சி.பி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பாடலை சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வில் டாக்டர் இளையராஜா இசையமைத்தார்.
பெரும்பான்மை மக்களை சென்றடைய வேண்டிய தங்களின் வணிக செயல்பாட்டிற்கு ,பரந்த தன்மையைக் குறிக்கும் ஒரு கலவையான இசை தேவைபட்டது.
இந்த இசை பொருளின் எளிமை தூய்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. மேஸ்ட்ரோவின் மந்திர இசை அதை செய்துள்ளது.
புல்லாங் குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கி, இசை படிப்படியாக இந்தியாவின் சக்திவாய்ந்த காட்சியாக விரிகிறது.
பல வழிகளில், இசை புதிய இந்தியாவைக் குறிக்கிறது, இது பாரம்பரிய மானது மற்றும் சமகாலமானது;
எப்போதும் செயல் புரிபவர் களையம், உலகையும் ஊக்குவிக்கும்,.என்று அந்த நிறுவனத்தால் இளையராஜா வின் இந்த இசையமைப்பு பற்றி கூறப்பட் டுள்ளது.




No comments