EThanthi - தேவரகொண்டா உடன் படத்தில் ஒப்பந்தமாகும் ஜான்வி கபூர்?

Flash News

தேவரகொண்டா உடன் படத்தில் ஒப்பந்தமாகும் ஜான்வி கபூர்?

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அடுத்தத்தாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தேவரகொண்டா உடன் ஒப்பந்தமாகும் ஜான்வி கபூர்?
சமீபத்தில் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த இளம் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா வும் ஒருவர் என ஜான்வி கபூர் தெரிவித்திருந்தார். 

இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் பரிந்துரையின்படி பூரி ஜெகன்நாத் திரைப்படம் ஒன்றில் விஜய் தேவரகொண்டா உடன் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

தென்னிந்திய மொழிகள் உடன் இந்தியிலும் வெளியாகும் வகையில் கரன் ஜோஹர்- பூரி ஜெஜன்நாத் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளன. 
விஜய் தேவரகொண்டா முன்னரே கரன் ஜோஹர் கூட்டணியில் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.

இதனால், கண்டிப்பாக இத்திரைப்படத்தில் ஜான்வி கபூர் எனக் கூறப்படுகிறது.

ஜான்வி கபூர் தற்போது குஞ்சன் சக்சேனா, ரூஹி அஃப்ஜா, தோஸ்தானா 2 ஆகிய திரைப் படங்களில் நடித்து வருகிறார். 

இதனுடன் நெட்ஃப்ளிக்ஸ் திரைப்படமான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ திரைப்படத்தி லும் ஜான்வி நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு விரைவில் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
தேவரகொண்டா உடன் படத்தில் ஒப்பந்தமாகும் ஜான்வி கபூர்? தேவரகொண்டா உடன் படத்தில் ஒப்பந்தமாகும் ஜான்வி கபூர்? Reviewed by EThanthi.in on December 17, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close