EThanthi - மேலாடை அணியாமல் வந்த பாடகியை கண்டு அதிர்ந்த பிரபலங்கள்.. காரணம் என்ன?

Flash News

மேலாடை அணியாமல் வந்த பாடகியை கண்டு அதிர்ந்த பிரபலங்கள்.. காரணம் என்ன?

பிரபல பாப் பாடகி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தியதால் அதை கண்டிக்கும் விதமாக மேலாடை அணியாமல் விருது விழாவிற்கு வந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலாடை அணியாமல் வந்த பாடகி
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

பல திரைத் துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிலி நாட்டை சேர்ந்த 36 வயதான பிரபல பாப் பாடகி மோன் லாஃபர்டேவும் கலந்து கொண்டார்.

மேலும், விருது வழங்கும் விழாவிற்கு அவர் வரும்போது, ஒட்டு மொத்த மீடியாவும் அவரையே திரும்பி பார்த்தது. காரணம், அவர் மேலாடை அணியாமல் நிகழ்ச்சியில் வந்திருந்தது தான்.

இவர், அவரது மார்பகத்தில், அவர்கள் டார்ச்சர் செய்கிறார்கள், பலாத்காரம் செய்து கொன்று விடுகிறார்கள் என்று சிலி மொழியில் எழுதியி ருந்தது. 
இதற்கு முக்கிய காரணம், கடந்த மாதம் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் நடந்தது.

இதனை கட்டுப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கை யில் 20 பேர் கொல்லப் பட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் பாடகி மோன் லாஃபர்டே மேலாடை இன்றி விருதை பெற்றார். 

மேலும், அந்த விருதை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலாடை அணியாமல் வந்த பாடகியை கண்டு அதிர்ந்த பிரபலங்கள்.. காரணம் என்ன? மேலாடை அணியாமல் வந்த பாடகியை கண்டு அதிர்ந்த பிரபலங்கள்.. காரணம் என்ன? Reviewed by EThanthi.in on November 18, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close