EThanthi - படத்தில் நடித்தது தான் நான் செய்த தவறு - நயன்தாரா !

Flash News

படத்தில் நடித்தது தான் நான் செய்த தவறு - நயன்தாரா !

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகை யாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ள மாட்டார். 
நயன்தாரா


ஆனால், தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நயன்தாரா பேட்டி என்பது அரிதினும் அரிதானது.

சமீபத்தில் பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். 

இந்நிலையில், வானொலி ஒன்றிற்கு பேட்டி யளித்த நயன்தாரா கூறியதாவது, 

’தனது கேரியரில் செய்த மிகப் பெரிய தவறு சூர்யாவின் கஜினியில் நடித்ததுதான். அந்தப் படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவி கேரக்டரில் நடித்திருந்தேன். 
அந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்ன போது, ஹீரோயின் அசினுக்கு இணையான வேடம் என கூறப்பட்டது.

ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறு விதமாக எடுத்து விட்டார்கள். 

அதற்கு பிறகுதான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். நயன்தாரா வின் இந்த பேச்சு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

கஜினி படத்தை இயக்கிய முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நயன் தாரா ஹீரோயினாக நடித்துள்ளது குறிப்பிடத் தக்கது. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
படத்தில் நடித்தது தான் நான் செய்த தவறு - நயன்தாரா ! படத்தில் நடித்தது தான் நான் செய்த தவறு -  நயன்தாரா ! Reviewed by EThanthi.in on November 06, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close