EThanthi - காற்று மாசு அதிகம் என்று பேசிய பிரியங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள் !

Flash News

காற்று மாசு அதிகம் என்று பேசிய பிரியங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள் !

டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளை விடவும் அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர். தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. 
பிரியங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள்

கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து காற்று மாசை குறைக்கும் நடவடிக்கை யில் அரசு இறங்கி யுள்ளது. 

டெல்லியில் அதிகரித்தி ருக்கும் காற்று மாசு குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கவலை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக முகமூடி யுடன் செல்பி ஒன்றை பகிர்ந்துள்ள அவர், ’காற்று மாசால் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக உள்ளது. 

இது போன்ற நிலைமையில் இங்கு எப்படி வாழ்வது என்று நினைத்து கூட பார்க்க முடிய வில்லை. நாம் காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடிக ளால் ஆசீர்வதிக்கப் பட்டு இருக்கிறோம். 

வீடு இல்லாதவர் களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்’ என அறிவுரை கூறி யிருந்தார். 

இதனை பார்த்த சமூக வலை தளவாசிகள் புகை பிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரிதான் என தெரிவித் துள்ளனர்.
அது மட்டுமின்றி காற்று மாசு குறித்து உங்களை போன்ற இரட்டை நிலைப்பாடு உடையோர் பேசக்கூடாது என்றும் கூறி வருகின்றனர். 

காற்று மாசை பற்றி பேசுவதற்கு முன்பு புகைப் பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது பிறந்த நாளை கொண்டாடினார். 

அப்போது குடும்பத்துடன் உட்காந்து அவர் புகைப்பிடித்த போட்டோக்கள் வைரலானது. அப்போதே அவர்மீது விமர்சனங்கள் பாய்ந்தன.
காற்று மாசு அதிகம் என்று பேசிய பிரியங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள் ! காற்று மாசு அதிகம் என்று பேசிய பிரியங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள் ! Reviewed by EThanthi.in on November 06, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close