EThanthi - நான் ஒரு பிரபலம், என்னைத் தொடாதீர்கள் - ரானு மோண்டல் !

Flash News

நான் ஒரு பிரபலம், என்னைத் தொடாதீர்கள் - ரானு மோண்டல் !

சமூக வலை தளங்களின் மூலம் பிரபலமான ரானு மோண்டலிடம், ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது அவரை ரானு மோண்டல் தள்ளி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
நான் ஒரு பிரபலம், என்னைத் தொடாதீர்கள்

இந்தி படப் பாடல் ஒன்றை ரானு மோண்டல் என்பவர் ரயில்வே நடைமேடையி லிருந்து பாடினார்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து இவர் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார். 

அதன் பின்னர் இவர் பாலிவுட் இசையமைப் பாளர் ஒருவருக்கு மூன்று பாடல் களையும் பாடினார்.

இதனால் இவர் பெரியளவில் வைரலான நபராக சமூக வலை தளங்களில் வலம் வந்தார்.

இந்நிலையில் மும்பையி லுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றுக்கு ரானு மோண்டல் சென்றுள்ளார். அப்போது இவரின் பெண் ரசிகர் ஒருவர், இவருடன் செல்ஃபி எடுப்பதற் காக முயன்றுள்ளார். 

அந்தச் சமயத்தில் ரானு மொண்டல் திரும்பி யிருந்ததால் அவரிடம் செல்ஃபி எடுக்க வருமாறு கையை தொட்டு அழைத்துள்ளார். இதானல் மிகவும் கோபம் அடைந்த ரானு, “என்ன செய்கிறீர்கள். 
என்னைத் தொடாதீர்கள். நான் தற்போது ஒரு பிரபலம். நீங்கள் என்னிடம் வந்து என்ன செய்கிறீர்கள்” எனக் கூறி யுள்ளார்.

ரானு மோண்டலின் இந்தச் செயல் தொடர்பான வீடியோ சமூக வலை தளத்தில் பதிவாகி யுள்ளது.

இதற்கு பலர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைதளம் மூலம் பிரபலமானவர் தற்போது அதே சமூக வலை தளத்தில் எதிர்ப்பை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
நான் ஒரு பிரபலம், என்னைத் தொடாதீர்கள் - ரானு மோண்டல் ! நான் ஒரு பிரபலம், என்னைத் தொடாதீர்கள் - ரானு மோண்டல் ! Reviewed by EThanthi.in on November 10, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close