விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைக்கும் இயக்குநர் சேரன் !
பாரதி கண்ணாம்மா படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சேரன். இவரது இயக்கத்தில் ஆட்டோகிராப், வெற்றிக் கொடி கட்டு, பொற்காலம் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் சினிமாவிற்கு பல படங்கள் கொடுத்துள்ள சேரன், சென்னை வடபழனியில் ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்ற 'வெல்கம் பேக் சேரன்' என்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கு பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணம் நடிகர் விஜய்சேதுபதி தான். அவரை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளேன்.
என்னிடம் ஒருநாள் போனில் பேசிய அவர், 'நீங்கள் வெற்றி இயக்குநர் என்பது இப்போது இருக்கும் இளம் தலைமுறை களுக்கு தெரியாது.
அவர்கள் மனதில் எல்லாம் இடம் பிடிக்க வேண்டும். எல்லோர் இல்லத்திலும் சேரன் எளிதாக நுழைய வேண்டும். அதற்கு நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும்' என்றார்.
அவர் ஆலோசனை யின்படி தான், நான் பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கு பெற்றேன்.
தொடர்ந்து பேசிய அவர், கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்குவது தொடர்பான கேள்விக்கு, "பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க வேண்டும் என விரும்பினேன்.
அதற்கான கதையும் என்னிடம் உள்ளது. கமல் சம்மதித்தால் தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன். இதை கமல்ஹாசனிட மும் தெரிவித்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.



No comments