EThanthi - பழம்பெரும் நடிகர் விஜு கோட்டே காலமானார் !

Flash News

பழம்பெரும் நடிகர் விஜு கோட்டே காலமானார் !

பழம்பெரும் நடிகரான விஜு கோட்டே (77) நேற்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டில், உறக்கத்திலேயே காலமானார். 
விஜு கோட்டே காலமானார்

1964 ஆம் ஆண்டில் தனது திரைப் பயணத்தை தொடங்கிய இவர், 300க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற, ஷோலே திரைப்படத்தில் காளியா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். 
அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த விஜு கோட்டேவுக்கு பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை விஜு கோட்டே உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித் துள்ளனர்.
பழம்பெரும் நடிகர் விஜு கோட்டே காலமானார் ! பழம்பெரும் நடிகர் விஜு கோட்டே காலமானார் ! Reviewed by EThanthi.in on October 01, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close