EThanthi - வைரலாகும் சிநேகாவின் சிறு வயது போட்டோ !

Flash News

வைரலாகும் சிநேகாவின் சிறு வயது போட்டோ !

நடிகை சினேகாவின் சிறு வயது ஃபோட்டோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. புன்னகை அரசி என்றால் கே.ஆர்.விஜயா தான் அந்த காலத்தில். 
வைரலாகும் சிநேகாவின் சிறு வயது போட்டோ

அதற்கு பிறகு நீண்ட காலமாக தக்க வைத்து கொண்டவர் யார் தெரியுமா. தமிழ் திரை உலகினர் புன்னகை அரசி என அன்பாக அழைத்து வரும் பிரபல நடிகையான சினேகாவின் சிறு வயது ஃபோட்டோ ஒன்று தற்சமயம், சமூக வலை தளத்தில் வைரலாக வருகிறது.
இந்த ஃபோட்டோவை பார்க்கும் அவரது ரசிகர்கள் சிறு வயதிலேயே சினேகா எவ்வளவு அழகாக இருக்கிறார் என தங்களது கருத்தை முன் வைத்து வருகின்றனர்.

நடிகை சினேகா மும்பையில் பிறந்து பின்னர் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும் அதன் பின்பு துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

1981 -ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி பிறந்த சினேகா பிரபல மாடலும் கூட.. 2000 ஆண்டு முதல் இன்று வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2012 -ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2015 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு குழந்தை
யை பெற்றெடுத்தார். நடிகை சினேகா என்னவளே, ஆனந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம், பம்மல்.கே. சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன்,

வசீகரா, பார்த்திபன் கனவு, போஸ், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் சினேகா.

சினேகா வுடைய சிரிப்புக்காகவே பல விளம்பரங்கள் அவருக்கு அள்ளிக் கொடுத்தன. குறிப்பாக துணிக்கடை, நகைக்கடை விளம்பரங்கள் ஏராளம்.
இவரின் சிறு வயது ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆவலாக சமூக வலைத் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரை எத்தனையோ கடைகளில் நேம் போர்டு பலகைகளில் சினேகா இருப்பது அவருடைய புன்னகை ஸ்பெஷல்.
வைரலாகும் சிநேகாவின் சிறு வயது போட்டோ ! வைரலாகும் சிநேகாவின் சிறு வயது போட்டோ ! Reviewed by EThanthi.in on September 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close