என்னை அம்மாவாக நடிக்க சொல்கிறார்கள் - நடிகையின் வேதனை !
ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானாராம் காதல் கொண்ட நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தாராம். தமிழில் தன்னை அறிமுகப் படுத்திய இயக்குநரையே காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.
பின்னர் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்களாம்.
பின்னர் நாயகி நடிப்பில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி யிருந்தாராம். இந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம். நாயகியாக மட்டு மில்லாமல், முக்கிய வேடத்திலும் நடிக்கிறாராம்.
சமீபத்தில் நாயகி முதன்மை கதா பாத்திரத்தில் நடித்த படத்திற்கு வரவேற்பு கிடைக்க வில்லையாம்.
இந்த நிலையில், தான் அம்மாவாக நடிக்க தயார், ஆனால், தனது வயதுடைய நடிகர்களுக்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வது தான் என்னை எரிச்சலாக்கு கிறது என்று நாயகி வேதனையுடன் புழம்பி யிருக்கிறாராம்.



No comments