பதவி ஏற்பு விழாவிற்கு நடிகைக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி !
பிரதமராக மோடி நாளை மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் அழைப்பு விடுத்துள்ள தாகவும், அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
மேலும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, மன்மோகன் ஆகியோருடன் ராகுல் காந்தியும் கலந்து கொள்கிறார்.
க்களவைத் தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை மாலை 7 மணிக்கு பிரதமராக பதவியேற்க வுள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்க வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
அதேபோல இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர் களுக்கும் முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர் களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், ஆனந்த் சர்மாவும் கலந்து கொள்வதாக முதலில் தகவல் வெளியானது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய இருவரும் விழாவில் கலந்து கொள்ள வில்லை என்று அறிவித்து விட்டனர்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலு க்கும் அழைப்பு விடுத்துள்ளனர். நடிகை காஜல் அகர்வால் இந்த விழாவில் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகி யுள்ளது.... cinehitz.com



No comments