EThanthi - நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார் !

Flash News

நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார் !

ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்திற் காக ராமநாத புரத்தில் தங்கி யிருந்தார். இன்று மதிய உணவு சாப்பாடு இடைவேளை யில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி யுள்ளது. 
ஜே.கே.ரித்திஷ் காலமானார்
இவர், 2009 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுக வில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
'சின்னப்புள்ள' என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து, 'நாயகன்', 'பெண் சிங்கம்', 'LKG' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்திலும் முக்கிய பதவிகளில் இருந்த பல்வேறு பணிகளை செய்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்த இவர், அவரது 3 வயதில் ராமநாத புரத்திற்கு வந்தது குறிப்பிடத் தக்கது. அவரது மறைவு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார் ! நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார் ! Reviewed by EThanthi.in on April 13, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close