EThanthi - தமிழக அரசுடன் பிளாஸ்டிக்கை ஒழிக்க கைகோர்த்துள்ள சூர்யா

Flash News

தமிழக அரசுடன் பிளாஸ்டிக்கை ஒழிக்க கைகோர்த்துள்ள சூர்யா

பிளாஸ்டிகால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து நீண்ட காலமாகவே பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு சுற்று சூழல் ஆர்வலர்கள் தீவிர பிராச்சரத்தில் ஈடுபட்டு வந்தனர். 
தமிழக அரசுடன் பிளாஸ்டிக்கை ஒழிக்க கைகோர்த்துள்ள சூர்யா
இந்நிலையில் தமிழ்நாடு மாநில அரசு கடந்த ஜனவரி அன்று தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல் படுத்தியது. ஆனாலும் கூட இன்னும் பிளாஸ்டிக்கை முழுமை யாக ஒழிக்க முடிய வில்லை என்பது தான் எதார்த்தம். தனி மனித வாழ்கையில் அன்றாட தேவைகளின் கட்டாயத் தேவையாக பிளாஸ்டிக் மாறியதே அதற்கு முக்கிய காரணம். 
பிளாஸ்டிக்கில் மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் என இரண்டு இருக்கிறது. இவற்றை மக்களின் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைத்தாலே பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து விடும். 

தற்போது இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசுடன் கை கோர்த்துள்ளார் நடிகர் சூர்யா. தனது 2-டி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பிளாஸ்க் ஒழிப்பு பிரச்சாரமாக குறும்படம் ஒன்றில் நடிக்கிறார். 

‘மாற்றலாம் மாறலாம்' என்கிற தலைப்பில் உருவாகும் இந்த குறும்படம் பிளாஸ்டிக்கின் தீங்குகளை குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் உருவாக இருக்கிறது.
தமிழக அரசுடன் பிளாஸ்டிக்கை ஒழிக்க கைகோர்த்துள்ள சூர்யா தமிழக அரசுடன் பிளாஸ்டிக்கை ஒழிக்க கைகோர்த்துள்ள சூர்யா Reviewed by EThanthi.in on March 09, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close