EThanthi - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம் !

Flash News

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம் !

ரஜினி முருகன், தொடரி, ரெமோ, நடிகையர் திலகம், சர்கார் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். விக்ரம், விஜய், சிவ கார்த்திகேயன், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம்
மற்ற படங்களை காட்டிலும், இவர் நடித்த படங்களிலேயே ”நடிகையர் திலகம்” திரைப்படம் தான் இவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது. தற்போது மலை யாளத்தில் “மரக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம்” என்ற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 
கீர்த்தி சுரேஷிற்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்திருக் கிறது. கால்பந்தாட்ட பயிற்சி யாளரின் சுயசரிதை தான் கதை களம். அது மட்டுமின்றி, தமிழ் மற்றும் தெலுங்கில், இயக்குநர் நரேந்திரா இயக்கத்தில் கதையின் நாயகியாக நடிக்க யிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ம் தேதி ஐதராபாத்திரத்தி லுள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தொடங்க யிருக்கிறது. இப்படத்திற் காக 7 ஏக்கரில் செட் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. 

கூடுதல் தகவலாக, ஜுன் மாதத்திற்கு பின் படப்பிடிப்பு அமெரிக்கா வில் துவங்க யிருக்கிறது என்று படக்குழு அறிவித்தி ருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ! Reviewed by EThanthi.in on March 09, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close