EThanthi - இணையத்தை கலங்கடித்த பிரியா வாரியாரின் லிப்-லாக் வீடியோ !

Flash News

இணையத்தை கலங்கடித்த பிரியா வாரியாரின் லிப்-லாக் வீடியோ !

தமிழ் திரையுலம் உள்பட நாடு முழுவதும் இணையத்தில் தேடும் அளவிற்கு ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா ப்ரகாஷ் வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர். 
பிரியா வாரியாரின் லிப்-லாக்

இப்பாடலினை ரசிகர்கள் பலரும் தங்கள் பானிக்கு தொகுப்பு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலப் படுத்தினர். இந்த வீடியோவில் இருந்த பிரியா வாரியர் மட்டும் இளசுகளின் மனதினை கொள்ளையடிக்க வில்லை, மற்றொரு நடிகையுமான நூரின் செரிப் என்பவரும் பலரால் நோட்டம் விடப்பட்டார். 

இதை யடுத்து, பிரியா வாரியர் என்றாலே இவர் இடம் பெற்றுள்ள கண் சிமிட்டும் பாடல் காட்சிகள் கண் முன்னே தோன்றும் அளவிற்கு இவர் கண் சிமிட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர் களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டி விட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. 

ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத் தள்ளியாவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அவருக்கு தற்போது இன்ஸ்டா கிராமில் சுமார் 50 லட்சதிறக்கும் மேல் ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து, சியத் ஷாஜகன் மற்றும் நூரின் ஷெரீஃப்-ன் நடிப்பில் ஒரு காதல் நகைச்சுவை படமாக மலையாளத்தில் கடந்த காதலர் தினத்தன்று வெளியானது. இதை யடுத்து, இப்படம் தெலுங்கில் வருகின்ற பிப்ரவரி 14, 2019 வெளியாக உள்ளது. 

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் லிப்-லாக் காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட் டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் விரலாக பரவி வருகிறது. இதற்க்கு முன்னதாக ப்ரியா வாரியாரின் பாலிவுட்டில் வெளியான 'ஸ்ரீதேவி பங்களா' படத்தின் டீசர் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது!.

இணையத்தை கலங்கடித்த பிரியா வாரியாரின் லிப்-லாக் வீடியோ ! இணையத்தை கலங்கடித்த பிரியா வாரியாரின் லிப்-லாக் வீடியோ ! Reviewed by EThanthi.in on March 26, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close