EThanthi - “கென்னடி கிளப்” பெண்கள் கபடி குழு போட்டியில் 16 மாநில வீராங்கனைகள் !

Flash News

“கென்னடி கிளப்” பெண்கள் கபடி குழு போட்டியில் 16 மாநில வீராங்கனைகள் !

சுசீந்திரன் இயக்கும் “கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சிக்காக சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய்திருக் கிறார்களாம். இந்தியா முழுவதிலும் இருந்து நிஜ பெண் கபடி வீரர்கள் வரவழைக்கப் பட்டார்கள். பரபரப்பான படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தை நோக்கி கென்னடிகிளப் நகர்ந்து கொண்டிருக் கிறது. 
கென்னடி கிளப்
சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. 
தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பிற் காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களி லிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடந்து வருகிறார்கள் . 

ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு ள்ளார்கள். படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வட இந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். 

இறுதிப் போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சி களுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப் படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்தார்.
“கென்னடி கிளப்” பெண்கள் கபடி குழு போட்டியில் 16 மாநில வீராங்கனைகள் ! “கென்னடி கிளப்” பெண்கள் கபடி குழு போட்டியில் 16 மாநில வீராங்கனைகள் ! Reviewed by EThanthi.in on March 22, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close