EThanthi - இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை வைரல் ட்வீட் - குறளரசன் !

Flash News

இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை வைரல் ட்வீட் - குறளரசன் !

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் பற்றிய அறிவிப்பும், தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் பற்றிய தகவல் களையும் கட்சிகளின் தலைமை வெளியிட்டு வருகின்றன. தற்போது, நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மக்களும் அதிக எதிர் பார்ப்புடன் இருக்கின்றனர். 
குறளரசன்
இதற்கு முக்கியக் காரணம், இதுவரை இருந்த இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இன்றைய அரசியல் களத்தில் இல்லாததே ஆகும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் இறப்பும், தி.மு.க தலைவர் கருணாநிதி யின் இறப்பும் தமிழக மக்களிடம் பெரிய சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

தற்போது நடந்துவரும் அரசியல் நிகழ்வுகள் யாவும், இந்த இரு பெரும் தலைவர்களின் பெயர்களை வைத்தே நடந்தேறி வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் ட்விட்டரில் இயக்குநர் சுசீந்திரன் மற்றும் குறளரசன் எனப் பெயரிடப்பட்ட பதிவுகள் வைரலாகி வந்தன. அதில் ஒரு பதிவாக, அஜித்தை அரசியலுக்கு அழைத்திருந்தார் சுசீந்திரன். 
இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை வைரல் ட்வீட்
இதற்குப் பதில் தரும்படியாக குறளரசன் எனப் பெயர் இடப்பட்ட பதிவிலிருந்து 'எங்க அப்பா தான் அடுத்த முதல்வர்' என்று ட்வீட் வந்திருந்தது. அதே போன்று, தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய தி.மு.க 234 தொகுதிகளில் கைப்பற்றும் எனவும் ட்வீட்டுகள் வந்திருந்தன. இதற்கு, பலரும் கிண்டலாகப் பதிவுகள் செய்திருந்தனர். 

இந்த ட்விட்டர் ஐடி, குறளரசனுடையது தானா என்ற சந்தேகமும் எழுந்தது. இது குறித்து குறளரசனிடமே கேட்டோம். 'இந்தப் பதிவுக்கும் எனக்கும் சம்பந்த மில்லை. இதொரு ஃபேக் ஐடி'' என்று அவரிடமிருந்து பதில் வந்தது. லட்சிய தி.மு.க நிறுவனத் தலைவர் டி.ராஜேந்திரனின் மகன் குறளரசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை வைரல் ட்வீட் - குறளரசன் ! இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை வைரல் ட்வீட் - குறளரசன் ! Reviewed by EThanthi.in on March 20, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close