EThanthi - URI படம் டவுண்லோட் செய்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி !

Flash News

URI படம் டவுண்லோட் செய்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி !

விக்கி கௌசல் மற்றும் யாமி கெளதம் நடிப்பில் வெளியான ஹிந்தி திரைப்படம், 'URI: The Surgical Strike'. 2016ல் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நடத்திய Surgical Strike-ஐ மையப்படுத்தி எடுக்கப் பட்டுள்ள இப்படத்தின் திருட்டு பிரின்ட்டை இணையத்தி லிருந்து டோரன்ட் பதிவிறக்கி யவர்களுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது. 
அது என்ன என்பதை இப்படிப் பதிவிறக்கிய ஒருவர் பதிவிட்டிருந்தார். 3.8 GB-க்கு படத்தைத் திருட்டுத் தனமாக பதிவிறக்கிய அவருக்கு படம் தொடங்குவது போல தொடங்கி, படத்தின் நட்சத்திரங்கள் விக்கி கௌசல் மற்றும் யாமி கெளதம் இப்படி திருட்டுத் தனமாக பதிவிறக்கிய வரை கலாய்த்துள்ளனர். 

இப்படி இவர்கள் செய்த prank 2 நிமிடம் ஓட, மீதி 2 மணிநேரத்திற்கு மேல் இப்படத்தின் டிரெய்லர் தான் மீண்டும் மீண்டும் ஓடியுள்ளது. URI படக் குழுவினர்களின் இந்த prank முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது. 

இதற்காக, உண்மையில் திருட்டு பிரின்ட்டுகள் எந்த தரத்தில் இருக்குமோ, அதே தரத்தில் இந்த ப்ராங் (prank) வீடியோவையும் எடுத்துள்ளனர். என்ன தான் இதனால் இதைப் போன்ற திருட்டு பிரின்ட்டுகள் வருவதைத் தடுக்க முடியாது என்றாலும், 
இதன் மூலம் எப்படி இந்தத் தளங்கள் உழைப்பைத் திருடுகின்றன என்ற விழிப்பு உணர்வு ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஏற்கெனவே, ஹிந்தி மட்டுமல்லாமல் மொத்த திரையுலகமே இந்தத் தளங்களால் பாதிக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும்
URI படம் டவுண்லோட் செய்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி ! URI படம் டவுண்லோட் செய்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி ! Reviewed by EThanthi.in on January 18, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close