EThanthi - நடிகை தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை !

Flash News

நடிகை தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை !

சென்னை வளசர வாக்கத்தில் சினிமா நடிகை ரியாமிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’, ‘அகோரி’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரியாமிகா.
இவர் வளசர வாக்கத்தில் உள்ள ராதாநகர் பகுதியில் வாடகை வீட்டில் தனது சகோதரர் பிரகாஷூடன் வசித்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று ரியாமிகா வின் காதலன் தினேஷும் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் ரியாமிகா தங்கியிருந்த அறையை பிரகாஷ், தினேஷ் ஆகியோர் நெடுநேரமாக தட்டியப் போது கதவு திறக்க வில்லை. 

இதனால் சந்தேக மடைந்த இருவரும் ஜன்னல் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ரியாமிகா காணப் பட்டுள்ளார்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து ரியாமிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணை யில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடை யில் அவரது செல்போனை கைப்பற்றிய காவல் துறையினர் தற்கொலைக்கு 

வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தி யுள்ளனர்.
நடிகை தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை ! நடிகை  தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை ! Reviewed by EThanthi.in on December 03, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close