EThanthi - நடிகை ராக்கி சாவந்த் திருமணம் - டி.வி. பிரபலத்தை கரம் பிடிக்கிறார் !

Flash News

நடிகை ராக்கி சாவந்த் திருமணம் - டி.வி. பிரபலத்தை கரம் பிடிக்கிறார் !

நடிகை ராக்கி சாவந்த் இந்தி டிவி, பிரபலம் தீபக் கலாலை டிசம்பர் 30ம் தேதி திருமணம் செய்கிறார்.
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் (வயது 40). கிளாமர் குயினான இவர் தமிழில், ’என் சகியே’, ’முத்திரை’ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள் ளார்.

இந்தி, தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். சமீபத்தில் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பானது.
அதுகுறித்து பேசிய ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். 

சண்டிகரில் நடந்த பெண்கள் குத்துச் சண்டை வளையத்து க்குள் தானாகச் சென்று வெளிநாட்டு வீராங்கனை யால் தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.
இந்நிலை யில் இந்தி டிவி பிரபலம், தீபக் கலால் (வயது 45) என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக இன்ஸ்டா கிராமில் தெரிவித் துள்ளார் ராக்கி சாவந்த். 

இவர்கள் திருமணத்துக் கான அழைப்பி தழையும் அதில் இணைந் துள்ளார்.

’டிவி நிகழ்ச்சியில் நானும் தீபக்கும் சந்தித்தோம். இருவரும் பழகினோம். 
அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னார். இது தான் என் திருமணத்து க்கு சரியான தருணம் என நினைத்து சம்மதித்தேன்.

இதையடுத்து இரு வீட்டு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளோம். 
எங்கள் திருமணம் டிசம்பர் 30 தேதி அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

திருமணத்தில் முன்னணி இந்தி திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.

புனேயை சேர்ந்த தீபக் கலால், டிவியில் பிரபலமா வதற்கு முன் முன்பு, மும்பையில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் டாக பணியாற்றி யுள்ளார்.
ராக்கி சாவந்த, கடந்த 2009-ல் டிவி சேனல் ஒன்று நடத்திய சுயம் வரம் நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.

(சுயம்வர நிகழ்ச்சியில்...)
அதன்படி அந்த நிகழ்ச்சியில் 15 பேரில் எலிஸ் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். திருமண நிச்சய தார்த்தம் நடந்தது. 

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தார் ராக்கி.
நடிகை ராக்கி சாவந்த் திருமணம் - டி.வி. பிரபலத்தை கரம் பிடிக்கிறார் ! நடிகை ராக்கி சாவந்த் திருமணம் - டி.வி. பிரபலத்தை கரம் பிடிக்கிறார்  ! Reviewed by EThanthi.in on December 03, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close