EThanthi - தேர்தல் முடிவுகள் குறித்த வைரலாகும் அனுராக் காஷ்யப் ட்வீட் !

Flash News

தேர்தல் முடிவுகள் குறித்த வைரலாகும் அனுராக் காஷ்யப் ட்வீட் !

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதை யடுத்தும் மக்கள் மாற்றி வாக்களித்தது பற்றியும் 

இயக்குநரும் படத்தயாரிப் பாளருமான அனுராக் காஷ்யப் மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக சூசகமாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட் டுள்ளார்.

ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில் 

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சி யளிக்கும் விதமாக காங்கிரஸ் கடும் போட்டி அளித்து வருகிறது. 

எந்தக் கட்சிக்கும் அங்கு மெஜாரிட்டி கிடைக்காது போல்தான் இருக்கிறது.

இந்நிலை யில் அனுராக் காஷ்யப் தன் ட்விட்டர் பதிவில் பிரேக்கிங் நியூஸ் என்று 

தலைப்பிட்டு தேர்தல் என்று நேரடியாகக் குறிப்பிடாமல் பதிவிட்ட போது, “கடந்த நான்கரை 

ஆண்டுக ளாக மக்களில் பலர் காது கேளாதவர்க ளாகவும், பார்வை யற்றவர்க ளாகவும் இருந்தனர். 

இவர்கள் திடீரென இப்போது பார்க்கிறார்கள்... கேட்கிறார்கள்” என்று ட்வீட் பதிவிட் டுள்ளார்.

இவரது ட்வீட்டுக்கு பெரும்பாலும் ஆதரவாக வும் ஆங்காங்கே எதிர்த்தும் கேலி செய்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் குறித்த வைரலாகும் அனுராக் காஷ்யப் ட்வீட் ! தேர்தல் முடிவுகள் குறித்த வைரலாகும் அனுராக் காஷ்யப் ட்வீட் ! Reviewed by EThanthi.in on December 11, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close