EThanthi - ரமேஷ் கண்ணா மகன் திருமணம் - கலந்து கொண்ட விஜய் !

Flash News

ரமேஷ் கண்ணா மகன் திருமணம் - கலந்து கொண்ட விஜய் !

இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணாவின் மகன் திருமண விழாவில் நடிகர் விஜய் 
கலந்து கொண்டு மணமக்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

இதுகுறித்த புகைப் படங்களும் வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் துணை இயக்குநராகவும் காமெடி நடிகராகவும் வலம் வந்தவர் ரமேஷ் கண்ணா. 

இவர் காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், விக்ரமன், மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் 

துணை இயக்குநராக பணியாற்றி யுள்ளார். இவருக்கு மனைவி ஷோபா. இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேலும் விக்ரமன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான உன்னிடத்தில் என்னை 
கொடுத்தேன் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் ரமேஷ் கண்ணா.

இதைத்தொடர்ந்து உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் மற்றும் ஆதவன் 

ஆகிய திரைப் படங்களில் நடித்து காமெடியில் பட்டையை கிளப்பி ஒரு வலம் வந்தார்.

ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். 

முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுக மானார் ஜஸ்வந்த்.

மேலும் சர்கார் படத்திலும் துணை இயக்குநராக பணியாற்றி யுள்ளார் ஜஸ்வந்த்.

இந்நிலையில் ஜஸ்வந்த் திருமண விழா பிரபல தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 
இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மணமக்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். 

இது குறித்த புகைப் படங்களும் வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
ரமேஷ் கண்ணா மகன் திருமணம் - கலந்து கொண்ட விஜய் ! ரமேஷ் கண்ணா மகன் திருமணம் - கலந்து கொண்ட விஜய் ! Reviewed by EThanthi.in on December 03, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close