EThanthi - விஜயின் ‘தளபதி63’ செட் வேலைகள் தொடங்கியது !

Flash News

விஜயின் ‘தளபதி63’ செட் வேலைகள் தொடங்கியது !

‘தளபதி63’ படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கி யுள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’. வழக்கம் போல் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்க வில்லை. 

இந்தப் படத்தினை அட்லி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். 

வசூல் ரீதியாக பெரிய வெற்றிய ஈட்டியப் படங்களாக இந்த இரு படங்களும் அமைந்தன.

இதனை அடுத்து ‘தளபதி 63’படத்தில் அட்லி ஒப்பந்தமாகி யுள்ளார். இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதன் மூலம் பெரிய இடைவெளி க்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். 

2009ல் வெளியான ‘வில்லு’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்பது குறித்து இன்னும் அதிகாரப் பூர்வ தகவல் வெளியாக வில்லை.

இந்நிலையில் புரடெக்‌ஷன் டிசைனர் முத்துராஜ், அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளி யிட்டுள்ளார். 

அதில், ‘விஜயின்‘தளபதி63’ படத்தின் செட் வேலைகள் தொடங்கி விட்டதாக’ தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கான புகைப்படம் ஒன்றையும் அவர் வெளி யிட்டுள்ளார். 

இந்த ஆண்டில் தொடங்க உள்ள ஷங்கரின் ‘இந்தியன்2’, விஜயின் ‘தளபதி63’ ஆகிய 

இரண்டு மிகப் பெரிய படங்களு க்கும் இவரே புரடெக்‌ஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
விஜயின் ‘தளபதி 63’ படத்திற்கான செட் வேலைகள் சென்னை பெரம்பூரி லுள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
விஜயின் ‘தளபதி63’ செட் வேலைகள் தொடங்கியது ! விஜயின் ‘தளபதி63’ செட் வேலைகள் தொடங்கியது ! Reviewed by EThanthi.in on December 03, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close