EThanthi - யாரும்என் உடல் எடையை விமர்சிக்க தேவையில்லை? – நித்யா மேனன் !

Flash News

யாரும்என் உடல் எடையை விமர்சிக்க தேவையில்லை? – நித்யா மேனன் !

விஜய் ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்தவர் நித்யா மேனன். காஞ்சனா–2, இருமுகன், 24, வெப்பம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 
மறைந்த முதல் –அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயர்ன் லேடி என்ற படத்தில்

ஜெயலலிதா வேடத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். மலையாள பட உலகில் முன்னணி கதா நாயகியாக இருக்கிறார்.
நித்யா மேனன் உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக விமர்சனங் கள் கிளம்பின. சமூக வலைத் தளங்களிலும் இதை குறையாக பேசி வந்தனர். 

பட வாய்ப்புகள் குறைந்துள்ள தாகவும் கூறப்பட்டது. இந்த விமர்சனங் களுக்கு நித்யா மேனன் பதில் அளித்துள்ளார். 

அவர் கூறியதாவது:–

‘‘எனது உடல் எடை பற்றி சமூக வலைத் தளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். 

இதற்கு நான் பதில் சொன்னாலும் சொல்லாமல் இருந்தாலும் விமர்சிப் பவர்கள் எனக்கு எதிராக பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்.

எனது உடல் எடை பற்றி நான் கவலைப் படுவது இல்லை. 
அது பற்றி நானே கவலைப் படாத போது மற்றவர் களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. அவர்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்.

எனது எடையை குறைக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தால் அதற்கு ஒரு மாதம் போதும். 
பழைய கதாநாயகிகள் அனைவரும் குண்டாகத்தான் இருந்திருக் கிறார்கள்.

அதற்காக தயாரிப் பாளர்கள் படங்கள் தயாரிப்பதை நிறுத்தவா செய்தார்கள்? சினிமாவில் நடிப்பு தான் முக்கியம், உடல் எடை முக்கியம் இல்லை. 

உடல் எடையை குறைத்தால் தான் படங்களில் நடிக்க முடியும் என்று யாராவது விரும்பினால் 

அந்த படங்கள் எனக்கு தேவை இல்லை.’’ இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
யாரும்என் உடல் எடையை விமர்சிக்க தேவையில்லை? – நித்யா மேனன் ! யாரும்என் உடல் எடையை விமர்சிக்க தேவையில்லை? – நித்யா மேனன் ! Reviewed by EThanthi.in on December 10, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close