அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு !
தமிழ் திரைப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு.
இவர் இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பனை செய்பவராக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கருப்பு ராஜா என்ற பெயரை கொண்ட இவர் கஞ்சா கருப்பு என அழைக்கப் படுகிறார்.
இதன்பின் ராம், சிவகாசி, அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அ.தி.மு.க.வில் தன்னை இன்று இணைத்து கொண்டார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச் சரும்,
அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப் பாளருமான பழனிசாமியை அவரது வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு இன்று சந்தித்தார்.
அப்போது அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் என தெரிவி த்துள்ளது.



No comments