EThanthi - நயனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் - வைரல் புகைப்படம் !

Flash News

நயனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் - வைரல் புகைப்படம் !

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. 
அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படம், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது. 

சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
டி.இமான் இசையமைத் துள்ளார். தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. 

சமீபத்தில் Azerbaijan நாட்டில் இந்தப் படத்தின் பாடல்கள் படமாக்கப் பட்டன. அப்போது அந்த நாட்டுக் குழந்தை ஒன்று நயன்தாரா வுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ ஒன்று வைரலானது. 

இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. 
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா வின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். 

நாளை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தை உலகமே கொண்டாட இருக்கும் நிலையில், படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நயன், முன் கூட்டியே கொண்டாடி விட்டார் என்கிறார்கள். 

 ‘விஸ்வாசம்’ தவிர ‘கொலையுதிர் காலம்’, ‘ஐரா’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’, ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’, கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள படம் என ஏகப்பட்ட படங்கள் நயன்தாரா நடிப்பில் ரிலீஸுக் காகக் காத்திருக் கின்றன.
நயனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் - வைரல் புகைப்படம் ! நயனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் - வைரல் புகைப்படம் ! Reviewed by EThanthi.in on December 25, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close