அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் - அஜித் இல்லை !
நம்மில் பலருக்கு நமக்குப் பிடித்த நடிகர் நடிகை எவ்வளவு சம்பளம் வாங்கு கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.
ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டவர் களின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.
கடந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்களின் பட்டியலில் மேற்சொன்ன வர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
சல்மான் கான்
ஒவ்வோர் ஆண்டும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் பல்வேறு துறைகளில் சாதித்த, அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
அந்த வரிசையில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் இந்த ஆண்டு (2018) அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங் களின் பட்டியலை வெளி யிட்டுள்ளது.
100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலி டத்தில் உள்ளார்.
ரஜினி
இந்த ஆண்டு இவர் ரூ.253 கோடி சம்பாதித் துள்ளார். ரூ.228 கோடி ரூபாய் சம்பாதித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நடிகர் அக்ஷய் குமார் ரூ.185 கோடி சம்பாதித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
தீபிகா படுகோனே நான்காவது இடத்திலும், தோனி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரின் ஆண்டு வருமானம் ரூ.50 கோடி.
விஜய்
நடிகர் விஜய் 26-வது இடத்தில் இருக்கிறார். அவரின் ஆண்டு வருமானம் ரூ.30.33 கோடி.
விக்ரம்
நடிகர் விக்ரம் ரூ.26 கோடி சம்பாதித்து 29-வது இடத்தில் உள்ளார்.
விஜய் சேதுபதி
நடிகர் சூர்யாவும் விஜய் சேதுபதியும் 34-வது இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரின் ஆண்டு வருமானம் ரூ.23.67 கோடி.
நடிகர் தனுஷ் ரூ.17.25 கோடி ஆண்டு வருமான த்துடன் 53-வது இடத்தில் உள்ளார்.
நயந்தாரா
இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே தமிழ் நடிகை நயன்தாரா. அவரின் ஆண்டு வருமானம் ரூ.15.17 கோடி.
பட்டியலில் பிடித்திரு க்கும் இடம் 69. இந்தப் பட்டியலில் நடிகர் அஜித்தின் பெயர் இடம் பெறவில்லை.
ஆக, ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியவர்கள் தாம் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தமிழ் நடிகர்கள்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் கடந்த சில வருடங்க ளாகவே தென்னிந்திய நடிகர்களின் பெயர்கள் அதிகளவில் இடம் பெறுகின்றன.
ஆனாலும் முதல் ஐந்து இடங்களை எப்படியாவது பாலிவுட் நடிகர்கள் பிடித்து விடுவார்கள்.









No comments