EThanthi - உதயநிதி ரசிகர்களுக்கு அறிவுறுத்தல் - எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் !

Flash News

உதயநிதி ரசிகர்களுக்கு அறிவுறுத்தல் - எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் !

தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களு க்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். தயாரிப்பா ளரான இவர் படங்களிலும் நடித்து வருகிறார். 

காமெடி கதை யம்சத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் கூட தற்போது அரசியல் மேடைக ளிலும் அவ்வப்போது இவர் தென்படுகிறார். 

இதன் மூலம் விரைவில் அரசியலுக்குள் அவர் நுழைவார் என எதிர் பார்க்கப் படுகிறது.

இந்நிலை யில் உதயநிதி ஸ்டாலின் நாளை தனது பிறந்த நாளை கொண்டாடு கிறார். 
இதனை யொட்டி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிர்களுக்கு அவர் அறிவுறுத்தி யுள்ளார். 

இது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலினின் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

அதில், கருணாநிதி மறைவாலும், கஜா புயலால் விவசாயிகள் மீளா துயரத்தில் இருப்பதாலும் 

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

அதற்கு பதில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சலி னால் 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நற்பணிகளை செய்ய வேண்டும் என கேட்டக் கொள்ளப் பட்டுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
உதயநிதி ரசிகர்களுக்கு அறிவுறுத்தல் - எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் ! உதயநிதி ரசிகர்களுக்கு அறிவுறுத்தல் - எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் ! Reviewed by EThanthi.in on November 27, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close