EThanthi - செளந்தர்யா ரஜினிகாந்துக்கு விரைவில் இரண்டாவது திருமணம் !

Flash News

செளந்தர்யா ரஜினிகாந்துக்கு விரைவில் இரண்டாவது திருமணம் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று.
அதேபோல், அவரது இளைய மகள் செளந்தர்யா, அஷ்வின் என்ற சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். 

திருமணத்திற் குப் பிறகு படம் இயக்குவதில் செளந்தர்யா தீவிரம் காட்டி வந்தார்.

இதற்கிடையே, செளந்தர்யா – அஷ்வின் தம்பதிக்கு வேத் என்ற மகன் பிறந்தவுடன், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டனர்.

விவாகரத்து க்குப் பிறகு தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கிய செளந்தர்யா, தொடர்ந்து படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வந்தவர்,

தொழிலதிபர் ஒருவரது மகனை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. 

மேலும், தனுஷ் கட்டுப்பாட்டில் செளந்தர்யா இருப்பதாக வும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், செளந்தர்யா தான் காதலித்து வருவதாக கூறப்பட்ட தொழிலதிபரின் 
மகனை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.

இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படு கிறது.

செளந்தர்யா திருமணம் செய்து கொள்ள இருப்பவரின் பெயர் விசாகன். இவர் வணங்காமுடி என்ற தொழிலதிபரின் மகன் ஆவார். மிகப்பெரிய கோடீஸ்வர ரான விசாகன்,

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படு கிறது.

தந்தையின் தொழிலை கவனித்துக் கொள்ளும் விசாகன், கடந்த சில மாதங்களு க்கு 

முன்பு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப் படத்தில் பத்திரிகை நிருபர் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
செளந்தர்யா – விசாகன் திருமண செய்தி தான் கோடம் பாக்கத்தின் தற்போதைய பரபரப்பு செய்தி என்றாலும், 

செளந்தர்யா வின் இந்த முடிவுக்கு தனுஷ் சம்மதித்தது பெரிய ஆச்சர்யம் தான், என்றும் பேசப்பட்டு வருகிறது.
செளந்தர்யா ரஜினிகாந்துக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ! செளந்தர்யா ரஜினிகாந்துக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ! Reviewed by EThanthi.in on November 27, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close