EThanthi - ஜாக்கிசான் மகள் ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்டார் !

Flash News

ஜாக்கிசான் மகள் ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்டார் !

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் 19 வயது மகள் எட்டா நக், தன் பாலினத்தவரை திருமணம் செய்து 

கொண்டதாக கூறி இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புகைப்படம் வெளி யிட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநரு மான ஜாக்கிசானின் மகள் எட்டாக் நக். 

இவர் கனடா நாட்டை சேர்ந்த அட்டுன் என்ற பெண்ணுடன் வாழ்ந்ததாக‌ கூறப் படுகிறது. 

இதன் காரணமாக வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட எட்டாக், ஹாங்காங்கில் 

சாலை யோரத்தில் உள்ள ஒரு மேம் பாலத்துக்கு கீழே வசித்து வந்ததாக ஏற்கெனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் தனது தோழி அட்டுனாவை திருமணம் செய்து கொண்டதாக எட்டா நக் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


திருமணத் திற்கு பின்னர் இருவரும் தங்களது நிறுவனத் தினை திறம்பட செயல்படுத்த திட்ட மிட்டுள்ள தாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட் டுள்ளார். 

தன் பாலினத்தவரை மகள் எட்டா திருமணம் செய்து கொண்டி ருப்பதால், நடிகர் ஜாக்கிசான் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

உலக பிரபலம் வாய்ந்த ஹாலிவுட் ஹீரோ ஜாக்கி என்பதால், இந்த விவகாரம் ஹாலிவுட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ஜாக்கிசான் மகள் ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்டார் ! ஜாக்கிசான் மகள் ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்டார் ! Reviewed by EThanthi.in on November 27, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close