EThanthi - இன்ஸ்டாகிராமில் இணைந்த ஐஸ்வர்யா ராய்?

Flash News

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஐஸ்வர்யா ராய்?

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் விரைவில் இன்ஸ்டா கிராமில் இணைய விருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலை தளங்களில் கலக்கிக் கொண்டிருக்க

ஐஸ்வர்யா ராய் ஆரம்ப நாட்கள் முதலே சமூக வலை தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

ஆனால், அவரது கோடிக்கணக் கான ரசிகர்கள் தொடர்ந்து அவரை சமூக வலை தளங்களில் கணக்கு தொடங்குமாறு வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வரும் கான்ஸ் திரைப்படத் திருவிழாவை முன்னிட்டு ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டா கிராமில் இணைய விருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இன்ஸ்டாகிராம் என்பது ஒரு ஃபோட்டோ ஷேரிங் அப்ளிகேஷன். இந்தத் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

ஐஸ்வர்யா ராய் அடுத்ததாக ஃபானி கான் என்ற படத்தில் அனில் கபூர், ராஜ்குமார் ராவ்  ஆகியோருடன் பணியாற்றி வருகிறார்.

இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இன்ஸ்டாகிராமில் இணைந்த ஐஸ்வர்யா ராய்? இன்ஸ்டாகிராமில் இணைந்த ஐஸ்வர்யா ராய்? Reviewed by EThanthi.in on July 14, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close