தங்கல் படம் பார்த்து நெகிழ்ந்த அதிபரின் மனைவி !
தென் கொரிய அதிபர் மூன் ஜே இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளார்.
கடந்த 8-ம் தேதி இந்தியா வந்த அவர் 11-ம் தேதி வரை 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொள்கிறார்.
இந்நிலையில் அதிபருடன் வருகை தந்திருக்கும் அவரது மனைவி கிம் ஜூங் சூக்,
இந்திய மாணவர் களுடன் தங்கல் திரைப் படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
அந்தப்
படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன கிம், கீதா போகத் மற்றும் அவரது சகோதரி
களை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித் திருக்கிறார்.
இது
குறித்து போகத் சகோதரிகளின் தந்தை மஹாவீர் சிங், "தென் கொரிய அதிபரின்
மனைவி எங்கள் குடும்பத்தைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததில் மகிழ்ச்சி.
இதை கவுரமாகக் கருதுகிறோம். அவருக்கு தங்கல் திரைப்படம் மிகவும் பிடித்துப் போயிருக்கிறது.
தங்கல் படம் இருநாட்டு உறவை வலுப்படுத்தும் ஊடாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி" எனக் கூறி யிருக்கிறார்.
2016-ல் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் தங்கல். மல்யுத்த வீராங் கனைகள் கீதா, பபிதா போகத்தை உருவாக்க
அவர் தந்தை மஹாவீர் சிங் எதிர் கொண்ட சவால்களை இந்தப் படம் காட்சிப் படுத்தி யிருக்கும்.



No comments